நடிகை தன்ஷிகாவின் புதிய படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு – விவரம் உள்ளே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் ‘யோகி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தன்ஷிகா. தனது உடல் மொழியாலும் ஆக்ஷன் ஸீக்வன்ஸ்களிலும் கட்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இன்னிலையில் ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இணைந்து தயாரிக்கும் யோகி டா என்ற படத்தில் தன்ஷிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் வளந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் சாய் தன்ஷிகா. தன்ஷிகா கதாநாயகியாக நடிக்க, வேதாளம், காஞ்சனா போன்ற படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான கபீர் சிங் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். கௌதம் கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தில், சாயாஜி ஷிண்டே, மனோ பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக S.K. பூபதியும், படத்தொகுப்பளராக G.சசி்குமாரும், இசையமைப்பாளராக A. R.ரஹ்மானின் சகோதிரியான இஷ்ராத் காதறியும், ஸ்டண்ட் இயக்குனராக கணேஷ் ,கௌதம் கிருஷ்ணா ஹிமேஷ் பாலாவும் இணைந்து வசனம் எழுதுகின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ட்விட்டரில் டிரெண்டாகியுள்ள நிலையில் படத்தின் பூஜை இன்று காலை (டிசம்பர் 10) நடைபெற்று, படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தன்ஷிகாவின் யோகி கதாபாத்திரத்தை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. யோகி டா திரைப்படம் ரசிகர்களுக்கான ஆக்ஷன் டீரிட்டாக இருக்கும் என கூறப்படுகிறது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news