நடிகர் விஷாலுக்கு திருமணம் – ஆந்திர பெண்ணை மணக்கிறார்

நடிகர் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஷால் செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நாயகனாகவும் வலம்வரத் தொடங்கினார். மேலும், தயாரிப்பாளராகவும் மாறி துப்பறிவாளன், பாண்டியநாடு, ஆம்பள’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது தமிழ் திரையுலகில் நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திருமணம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பப்பட்ட போது, நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் முடிந்து, அதில் தான் திருமணம் செய்து கொள்வேன். லட்சுமிகரமான பெண்ணைத் தான் திருமணம் செய்யவுள்ளேன்” என்று தெரிவித்து வந்தார் விஷால். நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடையும் என தெரிகிறது. இதனால், விஷாலுக்கு பெண் பார்க்கும் பணிகளில் அவரது பெற்றோர் ஈடுபட்டு வந்தார்.

தற்போது ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவை முடிவு செய்துள்ளனர். இதற்கு விஷாலும் சம்மதம் தெரிவித்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடிகர் விஷால் – அனிஷா நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது. நிச்சயம் நடந்த தினமே அவர்களது திருமண தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. நடிகர் விஷால் 40 வயதை கடந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news