திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் விஷால் ?

திருவாரூர் தொகுதியில் கருணாநிதியின் மறைவையொட்டி வரும் சனவரி 28-ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் எனவும், வாக்கு எண்ணிக்கை சனவரி 31 ஆம் தேதி நடைபெறும் எனவும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் சனவரி 3 ஆம் தேதி முதல் சனவரி 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் சனவரி 14 ஆம் தேதி ஆகும். இதில் நாம் தமிழர் கட்சி மட்டும் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை [சாகுல் அமீது] அறிவித்துள்ளது.

இந்தநிலையில் திருவாரூர் தொகுதியில் நடிகர் விஷால் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுக்குறித்து நடிகர் விஷால் ஆலோசனை நடத்தி வருகிறார் எனவும் தகவல்கள் வந்துள்ளன. ஏற்கனவே, ஜெயலலிதா மறைந்தவுடன், அவரது தொகுதியான ஆர்.கே. நகருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது வேட்பு மனுவை நிராகரித்தது தேர்தல் கமிஷன்.

இதனால் விஷால் தேர்தல் ஆணையத்திடம் நியாயம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் நடிகர் விஷால் திருவாரூர் தேர்தலில் போட்டியிட ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news