மலையாள திரையுலகில் தடம் பதிக்கும் நடிகர் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியை வைத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற வெற்றி படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன். இவர் தற்போது விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், மகேந்திரன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்ச்சியாக தமிழில் பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும், சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் மூலம் முதல்முறையாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில், சீரஞ்சிவி, அமிதாப் பச்சன், சுதீப், நயன்தாரா ஆகியோருடன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஒகேனக்கலில் சீரஞ்சிவி, சுதீப், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில், தெலுங்கைத் தொடர்ந்து மலையாளத்திலும் அறிமுகமாகவுள்ளார் விஜய் சேதுபதி. சனில் இயக்கத்தில் ஜெயராம் நாயகனாக நடிக்கும் Marconi Mathai என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி. பீட்சா, சூது கவ்வும், விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட விஜய் சேதுபதி நடித்த பல படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news