பொல்லாதவன், ஆடுகளம், ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்து மூன்றாவதாக கைக்கோர்க்கும் திரைப்படம்தான் வட சென்னை ஆகும். இப்படத்தில், தமிழ் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர் உள்பட பலர் பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இதையடுத்து தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் லைகா நிறுவனம் இப்படத்தை வெளியிட உள்ளதாக அதிகாரப் பூர்வ தகவலை வெளியிட்டது. இந்த படம், வட சென்னை மக்களின் வாழ்க்கை நடைமுறையை பிரதிபலிக்கும் விதமாக இப்படத்தின் கதை கரு அமைந்திருக்கும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் டீசரை பார்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டாரான நடிகர் ஷாருக்கான் நடிகர் தனுஷையும் படத்தின் முன்னோட்ட காணொளியையும் வெகுவாக பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்து.
இன்னிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.