September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

நடிகர் கமலுடன் மோதாமல் பின்வாங்கிய நடிகை நயன்தாரா – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கமல்ஹாசன் இயக்கி, நடித்த விஸ்வரூபம் திரைப்படம், பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த 2013-ல் வெளியானது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான விஸ்வரூபம் 2 அடுத்த மாதம் 10ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லரும் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்னிலையில் நடிகை நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா திரைப்படம் வெளிவர இருக்கிறது.

அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா ஆகும். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் வெளியிட்டு தேதியை சமீபத்தில் படக்குழுவால் ஆகஸ்ட் 10 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதே நாளில் கமலின் விஸ்வரூபம் 2 படம் வெளியாகவிருப்பதால் தபோது கோலமாவு கோலமாவு கோகிலா திரைப்படம் தள்ளிப்போய் உள்ளது. கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு படத்தின் வசூலும் பாதிக்கப்படாது என கூறப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news