September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

கும்கி 2 படக்குழு நேர்ந்த சோகம். சோகத்தில் மூழ்கிய படக்குழு. விவரம் உள்ளே

பிரபு சாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில் 2012-ம் ஆண்டில் வெளிவந்த கும்கி படத்தில், விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். அந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, 6 வருடங்களுக்குப்பின் அந்த படத்தின் இரண்டாம் பாகம், ‘கும்கி-2’ என்ற பெயரில் தயாராகி வருகிறது.

இதில், மதியழகன் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். கதாநாயகி முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பெராடி, பாலாஜி, சூசன், ‘கோலங்கள்’ திருச்செல்வம், ஸ்ரீநாத் ஆகியோருடன் 3 குழந்தை நட்சத்திரங்களும், உன்னி கிருஷ்ணன் என்ற யானையும் நடிக்கிறது. சுகுமார், ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.

kumki

படப்பிடிப்பு மைசூர் அருகில் உள்ள சிவசமுத்திரம் அருவி மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடைபெறுகிறது. அங்குதான் எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படப்பிடிப்பு நடைபெற்றது. அதன் பிறகு நடைபெறும் தமிழ் படப்பிடிப்பு இதுதான். இந்த படப்பிடிப்புக்காக இரண்டு விடயங்களில் சிரமப்பட்டுள்ளது படக்குழு. ஒன்று, யானை கிடைக்கவும் மற்றொன்று கதாநாயகி கிடைக்கவும் படக்குழு சிரமத்தில் இருந்துள்ளது. தற்போது யானை கிடைத்துவிட்டதாகவும், கதாநாயகி இன்னும் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news