விஜய் சேதுபதியால எப்படி இதெல்லாம் பன்ன முடியுது! – என்னனு படிச்சு பாருங்க

சென்னை: தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமான நடிகர் விஜய் சேதுபதி சீதாகாதி, பண்ணையாரும் பத்மினியும் இயக்குனர் அருண் குமாருடன் ஒருபடம், யுவன் தயாரிப்பில் சீனுராமசாமி இயக்கும் அடுத்த படம் என படு பிசியாக உள்ளார். மேலும் இவர் நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ், பேட்ட உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில், “தாக்க தாக்க” படத்தின் இயக்குனர் சஞ்சீவ் விஜய் சேதுபதிக்கு ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து அந்த கதையை சமீபத்தில் அவரிடம் கூறியுள்ளார். கதையை முழுமையாக கேட்ட நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் விக்ராந்த் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கூறி உங்களுக்கு ஓகே என்றால் இந்த படத்துக்கு நானே திரைக்கதை, வசனம் எழுதுகிறேன் என்று கூறி இயக்குனருக்கு அதிர்ச்சியூட்டிள்ளார். இதை கேட்ட இயக்குனர் உடனே ஓகே சொல்லிவிட்டார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த கவண் படத்தில் அவருடன் விக்ராந்தும் நடித்திருந்தார். சிறந்த நடிகரான விக்ராந்துக்கு சரியான கதை வராதால் அவரின் நடிப்பு திறமை  சினிமாவில் இன்னும் வெளிவாமலே உள்ளது.  இந்நிலையில், விக்ராந்த் நடிக்கும் புதிய படத்துக்கு விஜய் சேதுபதி திறைக்கதை, வசனம் எழுதுவது அவர்து நல்ல உள்ளத்தை வெளிப்படுத்தி உள்ளது. மேலும் படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

 

கடசியாக தனது சொந்த தயாரிப்பில் “ஆரஞ்சு மிட்டாய்” படத்துக்கு விஜய் சேதுபதி வசனம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news