Inandoutcinema - Tamil cinema news

பிக் பாஸை பின்னுக்கு தள்ளிய நயன்தாராவின் கோலமாவு கோகிலா. விவரம் உள்ளே

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா ஆகும். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்திலிருந்து ஏற்கனவே 3 பாடல்கள் வெளியிடப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் இந்த படத்தின் முன்னோட்ட காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. இந்த காணொளியை தற்போது வரை 1மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் முன்னோட்ட காணொளி வெளியானது முதல் தற்போது வரை ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் வளம் வருகிறது. இணையத்தில் லட்சுமி பட ட்ரைலர், பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ உள்ளிட்டவைகளை பின்னுக்கு தள்ளி ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news