September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

பசுமை வழி சாலை பற்றி நடிகர் கார்த்தியின் அதிரடி கருத்து. விவரம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

டி.இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். விவசாயத்திற்கும், கூட்டுக் குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் விவசாயிகள் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக போராடி வருகிறார்கள். அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

விவசாய நிலங்களில் அதிகாரிகள் பசுமை சாலைக்காக நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பசுமை வழி சாலை திட்டத்துக்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியத்தாவது : சேலம்– சென்னை பசுமை வழி சாலை திட்டம் தேவை இல்லாதது. விவசாய நிலங்களையும் மலைகளையும் அழித்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா ? விவசாயத்தை மட்டும் நம்பி இருக்கிறவர்களுக்கு இயற்கை விவசாயம் பெரும் சவாலாக இருக்கிறது என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news