September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

நாமெல்லாம் விவசாயினு காலர தூக்கிவிட்டு திரியனும் – கடைக்குட்டி சிங்கம் டீசெர்

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். விவசாயத்திற்கும், கூட்டுக் குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமான தனது பாணியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதியுள்ளார்.

நாமெல்லாம் விவசாயினு காலர தூக்கிவிட்டுக்கிட்டு திரியனும் என்ற வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னிலையில், இப்படத்தின் டீஸர் வெளியாகி வெளியாகி வைரலாக பரவி வருகிறது. கடைக்குட்டி சிங்கம் படத்தின் டீசெர், ஒரு நாள் கூட முழுமை பெறாத நிலையில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news