Inandoutcinema - Tamil cinema news

கேரள மக்களுக்கு உடனடியாக தண்ணீர், உணவு, மருந்துகள் தேவை – விஷால் வேண்டுகோள்

சென்னை: கேரளாவில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் கனமழையால் மாநிலமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக உதவி தேவைப்படுகறது.

இதுகுறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உடனடியாக தண்ணீர், டைபர், சோப்பு, பெட்ஷீட், மருந்துகள் உள்ளிட்டவை தேவைப்படுக்கிறது. உதவிரும்புபவர்கள் அதில் குறிப்பிட்டுள்ள முகவரியில் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை சேர்த்துவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதனை சினிமா பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் உதவ விரும்பினால் சபாஸ்டின் 9884098998 என்ற எண்ணுக்கு போன் செய்து விபரத்தை தெரிந்துகொள்ளவும்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news