வித்தியாசமான கதாபாத்திரங்களில் கீர்த்தி சுரேஷ்!!

தென்னிந்தியத் திரையுலகத்தில் விஜயசாந்திக்குப் பிறகு தனி கதாநாயகியாக பெயர் வாங்கியவர் என்றால் நயன்தாராவை மட்டும் தான் சொல்ல முடியும். விஜயசாந்தி அளவுக்கு இல்லை என்றாலும் சில முக்கியமான படங்களில் நடித்து தன் திறமையையும், புகழையும் நிரூபித்து வருகிறார் நயன்தாரா.

அவருக்கு அடுத்து தற்போது தென்னிந்தியத் திரையுலகத்தில் தனி கதாநாயகியாக நயன்தாரா வழியில் தன் பயணத்தை கீர்த்தி சுரேஷ் ஆரம்பித்துள்ளார்.

நேற்று கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய இரண்டு படங்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. ஒன்று தமிழ்ப் படமான ‘பென்குயின்’. மற்றொன்று பெயரிடப்படாத தெலுங்குப் படம்.

‘பென்குயின்’ படத்தில் கர்ப்பவதி ஆகவும், தெலுங்குப் படத்தில் கிராமத்துப் பெண்ணாக, மேக்கப் இல்லாமல் அவர் இருக்கும் போஸ்டர்களும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும், தெலுங்கில் ‘மிஸ் இந்தியா’, ஹிந்தியில் ‘மைதான்’, மலையாளத்தில் ‘மரக்கார் – அரபிக்கடலின்டே சிம்ஹம்’ ஆகிய படங்களிலும் அவர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news