விஜய் சேதுபதி படத்தின் நடிகைக்கு திருமணம் – அதிகாரபூர்வ அறிவிப்பு – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் திரைக்கதை மூலம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனர்களில் ஒருவர்தான் பாக்கியராஜ் ஆகும். அவரது இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் வெளியான சித்து +2 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் ரசிகர்களின் கவனத்தை பெறுவதற்கு தவறிவிட்டார். வில் அம்பு, கவண், வஞ்சகர் உலகம், பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இவரது நடிப்பில் வணங்காமுடி, டாலர் தேசம் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் இருக்கிறது. இன்னிலையில் தமிழ் தனக்கான இடத்தை பிடிக்க கடினமாக உழைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையை தனது திருமண செய்தியை அறிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் சாந்தினிக்கும் நடன இயக்குநர் நந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் 9 வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.

தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இருவருக்கும் நாளை திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளது என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமண விலாவில், இருவரது வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளனர்.

அதைத் தொடர்ந்து டிசம்பர் 16-ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. இதில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவுள்ளனர். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதைத் தொடர நடிகை சாந்தினி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news