இணையத்தில் வெளியான காற்றின் மொழி படத்தின் கெளம்பிட்டாலே பாடல் – காணொளி உள்ளே

இந்தியில் வெளியான துமாரி சுலு படத்தை இயக்குநர் ராதாமோகன் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார். துமாரி சுலு என்ற படத்தை இந்தியில் சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்தார். இப்படத்தில் சுலோச்சனா என்ற குடும்பத் தலைவியாக நடித்த வித்யா பாலன், எப்.எம். ரேடியோவில் தொகுப்பாளராகிறார்.

இதனால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட துமாரி சுலு படத்துக்கு இந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படத்தை தமிழில் இயக்குநர் ராதாமோகன் `காற்றின் மொழி என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இந்தியில் வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகாவும் அவரது கணவராக நடிகர் விதார்த்தும் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் மனோபாலா, லட்சுமி மஞ்சு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் காற்றின் மொழி திரைப்படம் ஜோதிகாவின் பிறந்த நாளான அக்டோபர் 18-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

சமீபத்தில் படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். தற்போது படத்தில் இடம் பெற்ற கிளம்பிட்டாளே விஜயலட்சுமி என்ற பாடலை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார். இந்த பாடல் இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news