September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

கடைக்குட்டி சிங்கம் இந்த விஷயத்துக்கு ஆசைப்படவைக்கும் – கார்த்தி

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். விவசாயத்திற்கும், கூட்டுக் குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் முன்னணி திரைபிரபலன்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி விவசாயம் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும் பேசினார்.

அப்போது நகரத்துக்கு இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் கிராமத்துக்கு வரவழைக்கும் இந்த படம் என கூறினார். மேலும் இது கூட்டு குடும்பம் மற்றும் சொந்தங்களின் முக்கியத்துவத்தை எடுத்து கூறுவதாக கடைக்குட்டி சிங்கம் படம் இருக்கும் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news