கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் பாண்டிராஜ் இயக்கத்தில், 2டி என்டேர்டைன்மென்ட் சார்பில் சூர்யா தயாரிப்பில் வெளியாகவுள்ள தமிழ்த்திரைப்படம் ஆகும். கார்த்திக், சாயிஷா சைகல் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களிலும் சத்யராஜ், பிரியா பவானி சங்கர், ஆர்த்தனா பினு ஆகியோர் துணைப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தில் டி.இமானின் இசையில் வேல்ராஜின் ஒளிப்பதிவில், உருவாகி வருகின்றது. இத்திரைப்படம் தெலுங்கில் சின்ன பாபு என்னும் பெயரில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் விவசாயியாக நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது. மேலம், படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அமேசான் வாங்கிவிட்டதாக படதயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.