இணையத்தில் வைரலாக பரவும் சூர்யா வெளியிட்ட தேவ் படத்தின் புகைப்படம் – புகைப்படம் உள்ளே

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் படம் தேவ் ஆகும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ரகுல்ப்ரீத் சிங், தீரன் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் கார்த்தியுடன் இணைகிறார்.

அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். லஷ்மண் தயாரிக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் குலு மணாலியில் மற்றும் புனே போன்ற நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த படம், இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் ஆரம்பத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதற்காக படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னிலையில் இந்த படத்தின் முதல் புகைப்படத்தை நடிகர் சூர்யா சில நிமிடங்கள் முன்னதாக வெளியிட்டார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் நடிகர் கார்த்தி கையில் தலைக்கவசத்துடன் முறைத்துக்கொண்டு இருப்பது போன்றும், அவர் பின்னால் விலையுயர்ந்த இருசக்கர வாகனம் இருப்பது போன்றும் புகைப்படம் உள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news