September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் ரகசியம் உடைக்கும் இயக்குனர் தேசிங் பெரியசாமி

இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் திரைப்படம்தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தில் பல புதிய திறமையாளர்களை தேசிங் பெரியசாமி கொண்டு வந்திருக்கிறார். கேரளாவின் மிகவும் பிரபலமான இசைக் குழுவான மசாலா காஃபி, இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் வெற்றிகரமாக வலம் வருகிறது.

அவர்கள் தான் துல்கர் சல்மான் மற்றும் ரிது வர்மா ஜோடியாக நடிக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு இசையமைக்கிறார்கள். இது பற்றி இயக்குனர் தேசிங் பெரியசாமி கூறியதாவது : இசை இன்னும் புதுமையாக இருக்க வேண்டும், அது தான் இந்த காதல் கதைக்கு பல வண்ணங்களை சேர்க்கும் என நினைத்தோம்.

இயற்கையாகவே, அழகான துல்கர் மற்றும் நேர்த்தியான ரிது வர்மா நடிப்பதால், இசை மூலம் இந்த காதல் கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். அதை இந்த இளைஞர் குழு மிகச்சரியாக செய்யும் என நாங்கள் நினைத்தோம். எற்கனவே இவர்கள் உறியடி படத்திற்கு இசையமைத்திருந்தாலும், அவை இவர்களின் முந்தைய ஆல்பங்களில் இருந்து உருவாக்கப்பட்டவை ஆகும்.

ஆனால் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் பாடல்கள் புதியதாக இருக்கும். படத்தில் வெவ்வேறு வகையான நான்கு பாடல்கள் உள்ளன. இந்த படம் மிகச்சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என தேசிங் பெரியசாமி கூறியுள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news