ஐஸ்வர்யா ராஜேஷ் கனா படத்தின் மூலம் அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார் – இணை தயாரிப்பளார் கலையரசு

சிவகார்த்திகேயனின் தோழரும், நடிகர்,பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகங்கள் கொண்டவருமான அருண்ராஜா காமராஜ், கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டராக ஆக விரும்பும் மகளுக்கும், அதற்கு ஆதரவாக இருக்கும் தந்தைக்கும் இடையிலான சம்பவங்கள்தான் படத்தின் கதை. அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது பற்றி இணை தயாரிப்பாளர் கலையரசு கூறியதாவது : ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் ஒரு பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்பதை கனா மறுபடியும் நிரூபித்திருக்கிறது. அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்படங்கள் எப்போதும் யதார்த்தத்துடன் மிக நெருக்கமாக இருக்கிறதுது. ‘கனா’ மூலம் அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார்.

அறிமுக திரைப்படம் என்றாலும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் தர்ஷன். மேலும் அவருடைய காட்சிகளை ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதை பார்க்க இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சத்யராஜ் சார் பற்றி நான் வேறு என்ன சொல்ல முடியும் ? தன் மாயாஜால நடிப்பால் படத்தின் முதுகெலும்பாக இருந்து படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறார். கனாவில் தன் இசையால் ரசிகர்களிம் கவனத்தை ஆரம்பம் முதலே ஈர்த்திருந்தார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்.

தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கும் அனுபவத்தை வழங்கிய ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் மற்றும் மிக வேகமாக படத்தை தொகுத்த ரூபன் ஆகியோரை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. இந்த திரைப்படத்தை சிறப்பாக உருவாக்க நிபந்தனையற்ற ஈடுபாட்டுடன் அவர்கள் கொடுத்த உழைப்பு தான் இப்போது அழகான படத்தை கொடுத்திருக்கிறது என இணை தயாரிப்பாளர் கலையரசு கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news