September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

சர்ச்சையில் சிக்கிய கமல் ஹாசனின் விஸ்வருபம் 2 படம். சோகத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். விஸ்வரூபம் படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் முன்னோட்ட காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த காணொளியை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரச்சினைகளில் சிக்கி 3 வருடங்களுக்கு மேல் முடங்கி இருந்த கமல்ஹாசனின் விஸ்வரூபம்–2 படம் வருகிற 10–ந் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகிறது.

இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படத்தை விளம்பர படுத்தும் நிகழ்ச்சிக்காக மும்பை, ஐதராபாத் நகரங்களில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இன்னிலையில் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு கமல் நடிப்பில் மர்மயோகி திரைப்படத்தை 100 கோடி செலவில் தயாரிப்பதற்கு ராஜ் கமல் நிறுவனத்துக்கும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த படத்தின் தயாரிப்பு பணிக்காக 6.90 கோடியும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என அனைத்தும் சேர்த்து அவருக்கு 4 கோடியும் பணம் வழங்கப்பட்டதாக கூறி, அந்த பணத்திற் வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என பிரமிட் சாய்மீரா கமலுக்கெதிராக நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த பணத்தை நடிகர் கமல் ஹாசன் திரும்ப செலுத்தாவிட்டால் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த படமும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுளள்து. வரும் 10ம் தேதி இந்த படம் வெளியாகுமா என்ற அச்சத்தில் ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news