தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் கமல் ஹாசனும் ஆகும். இவர்கள் இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகள் இரண்டும் எழுந்து வருவது அனைவரும் அறிந்ததே.
இன்னிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது : ஆசிரியர் தகுதி தேர்வில் நடந்த ஊழல் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும். இதுபோன்ற ஊழல்கள் பெருகிக் கொண்டே வருகிறது. இந்த ஊழல் பழகிவிடக்கூடாது என்பதால் விசாரணை வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.
தமிழக அரசு எந்த துறையில் ஊழல் நடந்தாலும் அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்?. இந்த நிலை மாறவேண்டும் என்பதற்காகத்தான் குரல் கொடுக்கிறோம். திருப்பரங்குன்றம் தொகுதியில் தற்போதைக்கு போட்டியிடும் முடிவு இல்லை. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது நியாயமான விலை குறைப்பு செய்யப்பட வேண்டும். மக்களை பாதிக்கக் கூடிய விஷயத்தில் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.