நாத்திகம் பேசும் கமலின் ஆன்மிக நம்பிக்கை – இந்தியன் 2

நடிகர் கமல்ஹாசன் மற்றும்  இயக்குநர் சங்கர் இணையும் படம் இந்தியன் – 2 . இந்த படத்திற்காக கமல் அவர்களுக்கு தாத்தா வேடத்திற்கான மேக்கப் டெஸ்டுகள் முடிந்து விட்டது.  டிசம்பர் 14 அன்று படத்தை தொடங்கலாம் என படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் படப்பிடிப்பிற்கான செட்கள் ரெடியாவதில் தாமதம் ஏற்படுவதால் படப்பிடிப்பு ஜனவரி 14-ற்கு பிறகு ஆரம்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செட் ரெடியாக தாமதம் ஆவது ஒரு காரணமாக இருந்தாலும்; மார்கழி மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்க கூடாது என்பதால்தான் தை மாதம் ஆரம்பிக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஆன்மிகத்தில் நம்பிக்கையில்லாத கமல்ஹாசன் அவர்கள் இதற்கு தலை அசைத்ததாகவும் கூறப்படுகிறது..  இந்தியன் 2 விற்கு பிறகு முழுநேர அரசியலில் இறங்கும் கமல் அவர்களுக்கு  படப்பிடிப்பு தள்ளி போனது பாதிப்பு ஏற்படுத்தாதா? இல்லை கமலும் மார்கழி மாதம் கழித்து படப்பிடிப்பை தொடங்க முழு சம்மதம் தெரிவித்தாரா? என்பது கேள்வியாக இருக்கிறது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news