September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

இந்தியன் 2 படத்தை பற்றிய ருசிகர தகவல் வெளியிட்ட நடிகர் கமல் ஹாசன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இவர் நடிப்பில் உருவாகும் விஸ்வரூபம் 2 படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சில பிரச்சினைகளில் சிக்கி 3 வருடங்களுக்கு மேல் முடங்கி இருந்த கமல்ஹாசனின் விஸ்வரூபம்–2 படம் வருகிற 10–ந் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகிறது. இந்த படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிக்காக மும்பை, ஐதராபாத் நகரங்களில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் அரசியல் சினிமா பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது இந்தியன்–2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்று கேட்டபோது கமல்ஹாசன் கூறியதாவது : இந்தியன் படத்துக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று பலவருடங்களுக்கு முன்பே நான் விரும்பினேன்.

அதை இயக்குனர் ‌ஷங்கரிடமும் வெளிப்படுத்தினேன். ஆனால் ‌ஷங்கருக்கு தயக்கம் இருந்தது. வெற்றி பெற்ற படத்தை எதற்காக மாற்றி எடுக்க வேண்டும் என்று யோசித்தார். நான் அவரிடம், நீங்கள் இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்கவில்லை என்றால் அந்த தலைப்பை என்னிடம் தந்து விடுங்கள் நான் எடுக்கிறேன் என்று கூறினேன்.

அதன்பிறகு சமீப காலமாக அரசியல் சம்பந்தமாக நான் பதிவிடும் கருத்துக்களை பார்த்த பிறகு இந்தியன்–2 படத்தை எடுக்கலாம் என்று அவருக்கு எண்ணம் ஏற்பட்டது. என்னுடையை அரசியல் பிரவேசம் என்ற புள்ளியில் இருவரும் ஒன்று சேர்ந்து இந்த படத்தை எடுக்க தயாராகி உள்ளோம். அரசியலில் தீவிரமாக ஈடுபடப் போவதை மனதில் வைத்தே இந்த படத்தில் நடிக்கிறேன் என நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news