தமிழக அரசை பாராட்டிய நடிகர் கமல் ஹாசன் – விவரம் உள்ளே

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த கஜா புயல், நேற்று நள்ளிரவு அதிராம்பட்டினத்தில் கரையைக் கடந்தது. தற்போது, கஜா புயல் தமிழகத்தைக் கடந்து கேரளா நோக்கி நகர்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தும், அதன் பாதிப்புகள் தீர சில வரன்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இதையடுத்து, பாதிப்புக்குள்ளாகும் எனக் கணிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு மின்சாரம் துண்டிப்பு, தாழ்வான பகுதி மக்களை வெளியேற்றுவது, தயார் நிலையில் மீட்புப் படைகள் போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. இதனால் புயல் கடுமையாகத் தாக்கியிருந்தும் பொதுமக்களுக்கும், மீனவர்களுக்கும் பெரிதான பாதிப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தமிழக அரசைப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : இதற்கு முன் நாம் கடந்துவந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது எனத் தெரிவித்துள்ளார். மேலும், அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், ஊடகங்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழக அரசு மேற்கொண்ட புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது என கூறியுள்ளார். இவர் மட்டுமின்றி, தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க தலைவர் ஸ்டாலினும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news