Inandoutcinema - Tamil cinema news

பூநூல் பற்றி நடிகர் கமல் ஹாசனின் அதிரடி கருத்து. விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகர் கமல் ஹாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியை துவங்கியுள்ளார்.

அதை அவர் சமீபத்தில் பதிவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் நடிகர் கமல் ஹாசன் டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது ஒருவர் நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், பூணூல் அதனாலேயே அதை தவிர்த்தேன்.

ஒரு முகத்து மேல இன்னொரு முகத்த போஸ்டரா ஒட்ட முடியாது’ என்று சொன்ன நீங்கள், பாரதியார் ஆக சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை உங்கள் ‘டுவிட்டர்’ பக்கத்தில் வச்சிருக்கீங்க. இதற்கு பிரத்தியேக காரணம் ஏதும் உண்டா என ஒருவர் கேட்டார். அதற்கு அவர் கூறியதாவது : எனது தகப்பன் முகத்தை என் முகத்தில் பொருத்தி பார்ப்பதில் தவறில்லை என நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news