தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிதத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பெயளிக்கையில் கூறியதாவது : தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர்.
நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியை சந்தித்தது, அவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலம் காங்கிரஸ் அணியில் அவர் இணைவதற்கான சிக்னல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அ.தி.மு.க. பக்கம் செல்வாரா? என்று என்னால் ஆரூடம் சொல்ல முடியாது. பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அணிகள் இணைவதற்கான வாய்ப்பும் இல்லை.
ரஜினி பா.ஜனதா பக்கம் சென்றால் தலித், சிறுபான்மையினர் உள்ளிட்ட 36 சதவீத வாக்குகளை இழப்பார் என கூறினார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவத் தொடங்கியது. இன்னிலையில் இதற்கு சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல் ஹாசன் பதில் அளித்துள்ளதாவது :
நடிகர் கமல்ஹாசன் என்னிடம் இருந்து கூட்டணிக்கு சிக்னல் வந்ததாக திருநாவுக்கரசர் கூறுவது செய்தி மட்டும்தான், நான் கூறினால் தான் சிக்னல் என கூறி உள்ளார். இருப்பினும் நடிகர் கமல் ஹாசன் காங்கிரஸ் கட்சியுடன்தான் கூட்டணி வைப்பார் என பொது மக்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.