September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

காலா திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு. விவரம் உள்ளே

நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே ஆண்டில் ரிலீஸ் ஆகவுள்ளது. அவை காலாவும் 2.0வும் ஆகும்.

இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பட அதிபர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த படத்துக்கு தடையில்லா சான்று கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

பின்னர் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் என நடிகர் தனுஷ் அறிவித்திருந்தார்.

இடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில் ரஜினியின் காலா திரைப்படத்தை வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகும் என நடிகர் தனுஷ் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் வெளியாகும் என ஆவலோடு இருந்த ரசிகர்கள், காலா திரைப்படம் தள்ளிப் போனதால் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news