September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

காலா படம் முக்கியமில்லை, காவிரி தான் முக்கியம் – நடிகர் கமல் அதிரடி

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலுக்குப் பின் நடந்த மிகப் பெரிய சர்ச்சை குழப்பங்களைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் முதல்வராகப் பதவியேற்றார் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமி.

இவரின் பதவியேற்பு விழாவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமாகக் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த கமல்ஹாசன், அன்றைய தினமே பெங்களூரு சென்று குமாரசாமியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டார். இந்நிலையில், காவிரி பிரச்சனையில் தண்ணீர் வரத்து குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு சென்றார்.

இதையடுத்து, இன்று காலை அவர் குமாரசாமியை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்திலை வைத்து நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது நடிகர் கமல் கூறியதாவது ; நான் மக்கள் பிரதிநிதியாக வந்துள்ளேன். நாங்கள் காவிரி உட்பட பல பிரச்சனைகள் குறித்து பேசினோம். இது கூட்டணிக்கான சந்திப்பு கிடையாது. குறுவை சாகுபடி தொடங்க இருக்கிறது.

அதனால், தண்ணீர் திறக்க நினைவூட்ட வந்துள்ளேன். காலா பற்றி கர்நாடக முதல்வரிடம் பேசுவது தேவையற்றது. அதுபற்றி பேசவும் இல்லை. என்னை கேட்டால் திரைப்படத்தைவிட மக்கள் பிரச்சனை தான் முக்கியம் என கூறினார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news