September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

முதல் நாள் வசூலில் கலக்கியது மெர்சலா இல்லை காலாவா ? விவரம் உள்ளே

ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காலா ஆகும். கபாலி படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது காலா. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக காலா நேற்று உலகம் முழுவதும் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேர்பை பெற்றுள்ளது.

தற்போது வந்த தகவலின்படி உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி வசூலை பெற்றுள்ளது என கூறப்படுகிறது. தயாரிப்பாளர் தரப்பில் கூறும் போது தமிழ்நாட்டில் ரூ. 17 கோடி, ஆந்திரா தெலுங்கானா ரூ. 7 கோடி,கேரளாவில் ரூ. 3 கோடி மற்றும் இந்தியாவில் ரூ 6 கோடி வெளிநாட்டு நாட்டிலிருந்து ரூ17 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது என கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் மெர்சல் படம் தான் கடைசியாக பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்த படம் என கூறலாம்.

தற்போது ரஜினிகாந்தின் காலா படத்திற்கும் அதே போலவே வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாளில் மட்டும் காலா படம் சென்னை பகுதியில் மட்டும் 1.76 கோடி வசூலித்துள்ளது. இது மெர்சல் வசூலான 1.52 கோடி ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் காலா திரைப்படத்தின் வசூல் மிக குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்தின் காலா முதல் நாளில் தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் ஒரு நல்ல தொடக்கத்தை பெறவில்லை என கூறப்படுகிறது. காலா தமிழகத்தில் 650 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், அதே நேரத்தில் உலக அளவில் 2,500 திரையரங்குகளிலும் வெளியாகி உள்ளது. கபாலி படத்தின் ப்ரோமோஷன் அளவிற்கு இந்த படத்தின் ப்ரோமோஷன் இல்லை என்ற காரணமே முன்வைக்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news