Inandoutcinema - Tamil cinema news

காலா இசை வெளியிட்டு விழாவில் கலைஞருக்காக வேண்டிய நடிகர் ரஜினி

கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி – பா.இரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் காலா. காலா திரைப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான பாடல்களை நடிகர் தனுஷ் நேற்று காலை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். இந்நிலையில், காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காலா படக்குழுவினரோடு, திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். அதேபோல், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்காக ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திரண்டனர். விருந்தினர்கள் அனைவரும் வந்தபிறகு கடைசியாக மைதானத்துக்கு வந்தார் நடிகர் ரஜினி.காலாவின் நிறம் கறுப்பு என்பதைக் குறிப்பால் உணர்த்தும் விதமாக இயக்குநர் இரஞ்சித் உள்பட பெரும்பாலானோர் அந்த நிறத்திலேயே உடையணிந்திருந்தனர். அப்போது பேசிய நடிகர் ரஜினி கூறியதாவது : இது இசை வெளியீட்டு விழாபோல் இல்லை. படத்தின் வெற்றி விழா போல் இருக்கிறது என கூறி பேச்சைத் தொடர்ந்தார். சிவாஜி பட வெற்றி விழா குறித்து பேசிய ரஜினி, அந்த விழாவில் கலைஞர் பேசிய விஷயங்களை மறக்க முடியாது. 75 ஆண்டுகளாக ஒலித்த அந்தக் குரலைக் கேட்க தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த மக்களில் நானும் ஒருவன். விரைவில் அந்தக் குரல் ஒலிக்க வேண்டும் என ஆண்டவனை நான் வேண்டிக் கொள்கிறேன் என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news