Inandoutcinema - Tamil cinema news

விமல் ஓவியா நடிக்கும் களவாணி 2 படத்தின் புகைப்படங்கள் வெளியீடு

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் களவாணி 2. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். ஏறக்குறைய முதல் பாகத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், அதே கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள்.

ஆனால் நடிகர் சூரிக்கு பதில் இந்த படத்தில் ஆர்ஜே விக்னேஷ் விமலின் நெருங்கிய நண்பராக நடிக்கிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் களவாணி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் 22ஆம் தேதி முடிய இருக்கிறது. எப்போதும் உத்வேகத்துடன் படத்தை முடிப்பதில் கவனத்தோடு இருக்கும் இயக்குனர் சற்குணம், மிக கடுமையாக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்.

முதல் பாகத்தில் இருந்த விமல், ஓவியா ஜோடி மீண்டும் இந்த பாகத்திலும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கிறது. சமீபத்தில் இந்த ஜோடி நடித்த ஒட்டாரம் பண்ணாத என்ற பாடல் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அவை இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news