Inandoutcinema - Tamil cinema news

ஜோதிகாவின் பிறந்தநாளில் வெளியாகும் “காற்றின் மொழி” – விவரம் உள்ளே

சென்னை: நடிகர் சூரியாவை திருமணம் செய்துகொண்டு குடும்பம், குழந்தைகள் என இருந்த நடிகை ஜோதிகா, தற்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் மீண்டும் தமிழ் சினிமாவிம் ஒரு ரவுண்டு வர தொடங்கியுள்ளார்.

இந்த ஆண்டு இவர் நடிப்பில் “மகளிர் மட்டும்”, “நாச்சியார்” ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்துள்ளது. இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் “செக்க சிவந்த வானம்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் “காற்றின் மொழி” படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளனர்.

குறிப்பாக இந்த படத்தில் ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகாவின் காட்சிகள் அனைத்தும் மூழுமையாக படமாக்கப்பட்டு விட்டது. இதனை கொண்டாடும் விதமாக இரண்டு நாட்களுக்கு முன்பு படபிடிப்புத்தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில், படத்தை வெளியிட தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் பாதம் 18ம் தேதி “ஆயுத பூஜை” தினத்தன்று படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று ஜோதிகாவின் பிறந்தநாள் என்பதால் அன்றே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு ஏற்கெவே திட்டமிட்ட்டிருந்தது.

இதுகுறித்த தகவல்களை படத்தின் தயாரிப்பளர் தனன்ஜெயன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த படத்தின் ஜோதிகா கணவராக நடிகர் வித்தார் நடிக்கிறார். மேலும், நடிகை லட்சுமி மஞ்சு மற்றும் நடிகர் சிம்பு ஆகியோரும் இந்த படத்தின் நடிக்கின்றனர்.  ஏ.எச்.காசிப் இசை அமைக்கிறார். ஹிந்தியில் கடந்த 2017ம் ஆண்டு நடிகை வித்யா பாலன் நடிப்பில் வெளிவந்த “tumhari sulu” படத்தின் தமிழ் ரிமேக் தான் “காற்றின் மொழி”.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news