நயன்தாராவின் வசனத்தில் ஜித்தன் ரமேஷ்

ungala podanum sir jithan ramesh

ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கும் அடுத்த புதிய படத்திற்கு நயன்தாராவின் வசனமான “ஒங்கள போடணும் சார்” எனப் பெயர்  வைக்கப்பட்டுள்ளது.

ஸிக்மா ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கும்  ‘ஜித்தன்’ ரமேஷ். இவர் ஜித்தன், ஜித்தன் 2  மற்றும் பல  உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர். இப்படத்தில் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி என்ற 5 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். இந்த ஐந்து பேருமே அறிமுக நாயகிகள் ஆவார்கள்.

இப்படத்தை இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் இயக்கவுள்ளார். இந்த [படத்தின் கதையை பற்றி இயக்குனர் கூறுகையில்  “நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள்” ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக தங்குகிறார்கள். அங்கு நடக்கும் ஜாலி, கேலி மற்றும் இவர்களுக்கு நடக்கும் கலவரங்களே இப்படத்தின் கதை.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news