ஜீவா நடிக்கும் சீறு ட்ரைலர் ரிலீஸ்!

தான் நடிக்கும் படங்களின் கதைகளை தேர்வு செய்வதில் எப்போதும் நடிகர் ஜீவா தனித்துவம் காட்டுவார்.

கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த கொரில்லா திரைப்படம் ஓரளவிற்கு சுமாராக ஓடியது. இருந்தாலும் சொல்லிகொள்ளுமளவிற்கு வசூல் ஈட்டவில்லை. இந்நிலையில் தற்போது ரெக்க பட இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் சீறு என்ற படத்தில் நடித்து  வருகிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ட்ரைலர் சற்றுமுன் யூடியூபில் வெளியாகியுள்ளது.

  ரியா சுமன் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் சதிஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள இப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் ஜீவா பாலிவுட்டில் கபில் தேவ்வின் வாழக்கை வரலாற்று படமான “83” படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news