Inandoutcinema - Tamil cinema news

சர்கார் படம் மீது நடவடிக்கை பாயும் – அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை

சென்னை: விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன சர்கார் படம் இரண்டே நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது ஒருபுரம் இருக்க படத்தில் உள்ள சர்ச்சைக்குறிய வசனங்கள் மற்றும் காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர்களின் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதா இல்லாததால் சினிமா நடிகர்களுக்கு குளூரு விட்டுபோய்விட்டது, சர்கார் படம் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழுக்கு தொண்டாற்றிய வீரமா முனிவரீன்  338வது பிறந்தநாளான இன்று அரசு விழாவாக தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள வீரமா முனிவரின் உருவச்சிலைக்கு அதிமுக அமைச்சர்கள் ஜெயகுமார், பாண்டியராஜன், பெஞ்சமின் அகியோர் மாலை அணிவித்து மறியதை செலுத்தினர்.

பின்னர் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 16ம் நூற்றாண்டில் பிறந்த வீரமாமுனிவரின் 338வது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுகிறது. தமிழக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் ஏராளம். இந்த உலகம் உள்ளவரை அவர் புகழ் இருக்கும் என்றார்.

பின்னர் நிருபர்கள் அவரிடம் சர்கார் படத்தில் வரும் சர்க்குறிய பெயர் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘திரைப்படம் எடுப்பவர்களுக்கு இது பேஷன் அகி விட்டது. அம்மா இல்லாததால் நடிகர்களுக்கு குளூரு விட்டு போச்சு. அவர் இருக்கும்போது இவர்கள் இப்படி தைரியமாக படம் எடுத்திருந்தால் அதை மெச்சிருப்போம். நடிகர்கள், படம் எடுப்பவர்கள் தங்கள் கருத்துகளை மட்டும் கூறினால் தவறில்லை. ஆனால், அவர்களை முன்னிலைப்படுத்தி கொள்வது தவறு. சட்டத்துறை அமைச்சர் கூறியது போல அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவர்கள் எல்லாம் எம்ஜிஆர் போல பெயர் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்கள் என்ன அழுது புறண்டாலும் இவர்கள் எம்ஜிஆர் போல அங்கிகாரம் பெறமுடியாது. மற்றவர்களை புன்படுத்துவதுபோல படம் எடுத்தால் கண்டிப்பாக சட்ட நடவடிக்கை பாயும்’ இவ்வாறு அவர் கூறினார்

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news