ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் திடீர் மாற்றம்…. காரணம் இதோ!

டேனியல் கிரேக் ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடித்திருந்த ’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 8ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த படம் வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து ஜேம்ஸ் பாண்ட் ட்விட்டர் தளத்தில் கூறியபோது கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் இருப்பதால் உலகெங்கிலும் பல நாடுகளில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு உள்ளது. ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வதையே மறந்து விட்டனர்.

இந்த நிலையில் ’நோ டைம் டு டை’என்ற திரைப்படத்தை வெளியிட நாங்கள் விரும்பவில்லை எனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த தேதியில் கொரோனா வைரஸ் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை பார்த்த பிறகே இந்த தேதியும் உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news