September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

சர்ச்சைக்கு பயந்து அந்தர் பல்டி அடித்த ஜக்கி வாசுதேவ். வறுத்தெடுக்கும் பொது மக்கள்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆன்மிக குரு என சொல்லிக்கொள்ளும் ஜக்கிவாசுதேவ், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான் ஒன்றும் காப்பர் உருக்காலை தொழில்நுட்பத்தில் வல்லுநர் கிடையாது. ஆனால், எனக்குத் தெரியும் இந்தியாவுக்கு அதிகப்படியான காப்பர் தேவைப்படுகிறது. ஒருவேளை நாம் தேவையான அளவு, காப்பர் தயாரிக்கவில்லையென்றால், கட்டாயம் சீனாவிடமிருந்துதான் வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் மீதான அத்துமீறல்களை சட்டப்படி அணுக வேண்டும். பெரிய அளவிலான தொழிலை முடக்குவது பொருளாதாரத் தற்கொலை என நேற்று பதிவிட்டிருந்தார்.

இந்த கருத்துக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த பட்டியலில் நடிகர் சித்தார்த்தும் இணைந்துள்ளார். ஜக்கிவாசுதேவின் ட்விட்டுக்கு பதிலளித்துள்ள நடிகர் சித்தார்த், யோகாவைத் தவிர வேறு எதைப் பற்றியும் பிரதமர் பேசமாட்டார். காப்பர் உருக்காலையின் பயன்களைப் பட்டியலிடுவதற்கு இது சரியான நேரம் இல்லை சத்குரு. மக்கள் காவல்துறையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். குடிமக்களைச் சுடுவது கொலை. அந்தக் கொலையைப் பற்றிப் இப்பொழுது பேசுங்கள் பேசுங்கள் என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், தனது கருத்து சர்ச்சை ஏற்படுத்தியதை அறிந்த ஜக்கி வாசுதேவ், தற்பொழுது சமாளிக்கும் வகையில் மீண்டும் ஒரு கருத்தை டிவிட்டரில் வெளியிட்டார். அதில், ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்த ஆலைக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ நான் ஆதரவு தெரிவிக்கவில்லை என பல்டி அடித்துள்ளார். மாரி மாரி பேசுவதால் பொதுமக்கள் சிலர் ஜக்கி வாசுதேவை பொலிசாமியார் என சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவிவருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news