இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய பேட்ட – விஸ்வாசம் படங்களின் ரிலீஸ்!

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் “விஸ்வாசம்”. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமய்யா, கோவை சரளா, யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில்  இதன்  இறுதி கட்ட படபிடிப்பு மும்மையில் நடந்து வருகிறது. வரும் நவம்பர் முதல் வாரத்தில்  சூட்டிங்கை முடிக்க படக்குழிவினர் திட்டமிட்டுள்ளனர். அதனை தொடர்ந்து டப்பிங் மற்றும் போஸ்ட் புரோடர்க்‌ஷன் பணிகள் முடிந்து வரும் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதுஒரு பக்கம் இருக்க கார்த்திக் சுப்பா ராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “பேட்ட” படத்தின் படப்பிடிப்பும் முடிந்து, அடுத்த கட்ட பணிகளை தொடங்கவுள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது இணையத்தில் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

குறிப்பாக “பேட்ட” படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனால்.. அஜித்தின் “விஸ்வாசம்” ரிலீஸ் தள்ளி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு அஜித் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து சினிமா விமசர்கள் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை குரோம் பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டர் நிறுவனர் ராகேஷ் “பேட்ட” படத்தில் பொங்கல் வெளியீடு என்று குறிப்பிட்டுள்ள போஸ்டரை ஷேர் செய்து “விஸ்வாசம்” படம் அதே தேதியில் ரிலீஸ் ஆகுமா? அல்லது குடியரசு தினத்திற்கு தள்ளி வைக்கப்படுமா? என்று கேட்டுள்ளார்.

சினிமா விமர்சகர்கள் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் 6 நாட்கள் விடுமுறை என்பதால் அதில் எந்த நாளில் ரிலீஸ் செய்தாலும் கலெக்சன் பாதிக்காது என்று தெரிவித்துள்ளனர்.

படத்தின் கலெக்‌ஷன் பிரச்னை ஒரு பக்கம் இருந்தாலும் பெரிய நடிகர்கள் படம் ரிலீஸ் ஆகும்போது சின்ன நடிகர்கள் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காது. ஆனால், இம்முறை இரண்டு பெரிய நடிகர்கள் படம் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் என்பதால் எந்த படத்துக்கு அதிகமான தியேட்டர்கள் கிடைக்கும். அல்லது ஏதாவது ஒரு படம் தள்ளி வைக்கப்படுமா என்றே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news