September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

நடிகர் விஜய் 64 படத்தின் இயக்குனர் இவரா ? விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ்.

இன்னிலையில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரில் ஒருவரான சசிகுமார் வரலாற்று படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல்க வெளியாகி இருந்தன. அதை உறுதிப்படுத்தும் விதமாக சசிகுமார் இயக்குனர் ராஜமௌலி அவர்களை சந்தித்து இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இதனால் இயக்குனர் சசிகுமார் ராஜமௌலி இயக்க உள்ள வரலாற்று படத்தில் நடிக்கிறாரா? என்ற கேள்வி எழுந்து இருந்தது. இதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. ராஜமௌலி இயக்கும் படத்தில் சசிகுமார் நடிக்கவில்லை என்றும், வரலாற்று படங்களை இயக்குவதில் ராஜமௌலி கை தேர்ந்தவர் என்பதால் இவர் இயக்கவுள்ள படத்திற்காக சில ஆலோசனைகளை கேட்டறியவே ராஜமௌலியை சந்தித்து பேசியுள்ளார்.

விரைவில் தொடங்க உள்ள இந்த படத்தில் நடிகர் விஜய் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயிடம் ஒரு வரலாற்று கதையை சசிகுமார் கூற அந்த கதை விஜய்க்கும் பிடித்து இருந்தது கூறப்படுகிறது. இதன் காரணமாக சசிகுமார் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் நடிக்க வாய்ப்பு இருப்பதாக நெருங்கிய திரைவட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news