Inandoutcinema - Tamil cinema news

ராஜேஷ் மற்றும், ரவிக்குமாரை தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்கப்போகும் பிரபல இயக்குனர்- அதிகாரபூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ள படம் சீமராஜா ஆகும். இந்த சீமராஜா திரைப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் பொன்ராம்.

இத்திரைப்படத்தை டி.இமான் இசையில், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில், 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. இந்த படம் சமீபத்தில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியது. சீமராஜா திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

தற்போது ராஜேஷ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனரான ரவிக்குமார் இயக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இன்னிலையில் சிவகார்த்திகேயனின் 15 வது படத்தை இயக்குனர் மித்ரன் இயக்கவிருக்கிறார். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news