வலுவான நிலையில் ஆஸ்திரேலியா – தடுமாற்றத்தில் இந்திய அணி

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்திய அணி பங்கேற்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் 6 ரன்கள் எடுத்து, புவனேஷ்குமார் பந்தில் கிளீன் போல்டு ஆனார். ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த போதிலும், கணிசமாக ரன்களையும் சேர்க்கத்தவறவில்லை. அந்த அணியில் உஸ்மான் காவ்ஜா 59 ரன்கள், ஷான் மார்ஷ் 54 ரன்கள், ஹேண்ட்ஸ்கோம்ப் 73 ரன்கள், மார்கஸ் ஸ்டாயின்ஸ் 47 ரன்கள் என பொறுப்பான முறையில் ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தரப்பில், புவனேஷ் குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் கடைசி பந்தில் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய கோலி, ராயுடு ஒரே ஓவரில் ரிச்சர்ட்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 4 ஓவர் முடிவில் 3 விக்கட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. தோணி மற்றும் ரோஹித் ரன் ஏதுமின்றி களத்தில் உள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news