இந்தியன் – 2 கமலின் கடைசி படம் – ஒரு பார்வை

இந்தியன் 2 கமல்ஹாசனின் கடைசி படம். சங்கரின் 14 வது படம். படம் இன்று ஆரம்பிக்கபடுகிறது. இதுவரை நாம் இந்தியன் 2 வை பற்றி கேட்டறிந்தது என்ன?

கமல்ஹாசன் இது தான் நடிக்கும் கடைசி படம் என அறிவித்தார். சிம்பு இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் படத்திலிருந்து விலகியதாக இரண்டு நாட்களுக்கு முன்பு தகவல் வந்தது. படத்தின் கதாநாயகி காஜல் அகர்வால் களரி கற்று கொண்டதாக தகவல்கள் வெளியாகியது.

படத்திற்கு இசை அனிருத். ஏ.ஆர் ரகுமான் இந்தியனுக்காக கொடுத்த தீம் மியூஸிக் என்ன ஆகும். காத்திருப்போம். சுஜாதா இல்லாதா இந்தியன்-2. ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.

கேமராமேன் ரவி வர்மன். ஜீவா இல்லாததால் தான் அவரும் மாறியிருப்பார் என்று நம்புவோம். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். லெனின் மற்றும் விடி.விஜயனின் காம்பினேஷன் பிரிந்தது. ஆனால் இருவரில் யாராவது ஒருவர் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் நமக்குள்.

மொத்தத்தில் கமல், சங்கர் என்ற இருவர் தான் இந்தியன் முதல் பாகத்தில் நமக்கு தெரிந்த நபர்கள் இந்தியன் 2வில் தொடர்கிறார்கள். 21 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் இந்த காம்பினேஷன் இந்தியன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சில பெரும்புள்ளிகளை இழந்து உருவெடுக்க நிற்கிறது. அதன் அழகை பார்க்க ரசிகர்களான நாங்கள் காத்திருக்கிறோம்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news