கைமாறுகிறதா கமலின் இந்தியன் 2?

இந்தியன் 2 படப்பிடிப்பு தற்பொழுது நடந்து வருகிறது. அதன் முதல் கட்ட படப்படிப்பு கமலின் சேனாதிபதி தோற்றம் சரியாக இல்லாததால் தள்ளி வைக்கப்பட்டது. இப்படி ஆரம்பிக்கும் பொழுதே பிரச்சனையில் இருந்த இந்தியன் 2 படத்திற்கு மற்றுமொரு பிரச்சனை உருவாகியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இயக்குநர் ஷங்கரிடம் மொத்த பட்ஜெட்டை கேட்டுள்ளனர். அதற்கு காரணம் 2.0 வில் அவர்களுக்கு உண்டான நஷ்டம். ஆனால் சங்கர் அதற்கு மவுனம் சாதிப்பதாக கூறப்படுகிறது. இதனால் படம் கைமாறா வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் படத்தை தெலுங்கில் ஒரு பெரிய நிறுவனம் தயாரிப்பதாகதான் செய்திகள் வந்தன. அதையும் கமல் தனது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறினார். பின்னர் என்ன காரணம் என்று தெரியவில்லை அந்த நிறுவனம் பின் வாங்கி அது லைக்காவிடம் வந்தது. இப்பொழுது லைக்காவும் ஷங்கருக்கு முட்டுகட்டை போட்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதற்கு கமல் தரப்பிலிருந்து என்ன கருத்து வர போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news