பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மலேசியவில் நடைபெற்று வருகிறது. இதில் வங்காளதேசம், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. குருப் சுற்றுக்கள் முடிந்த நிலையில், பட்டியலில் முதலிடம் வகித்த இந்திய அணி, பட்டியலில் இரண்டாம் இடம் வகித்த பாகிஸ்தான் அணியுடன் மோதியது.
அரையிறுதி போட்டியாக ரசிகர்களால் கருதப்பட்ட இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து இருந்தது. இந்திய அணி தரப்பில் ஏக்த பிஷ்த் 3 விக்கட்டுகளும், தீப்தி சர்மா, பூனம் யாதவ், அனுஜா பட்டில், ஷிகா பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கட்டுகளும் எடுத்துள்ளனர். இதையடுத்து, 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய இந்திய அணி 16.1 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இந்திய அணியில் அதிக பட்சமாக மந்தனா 38 ரன்களும் , ஹர்மான்ப்ரீட் கௌர் 34 ரன்களும் எடுத்துள்ளனர். மற்றவர்கள் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. இந்த போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.