Inandoutcinema - Tamil cinema news

4வது டெஸ்டில் வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணி – விவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் மைதானத்தில் இன்று துவங்கியது.

ஒரு வார கால ஓய்வுக்கு பிறகு இரு அணி வீரர்களும் புத்துணர்ச்சியுடன் களம் இறங்கி உள்ளனர். இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிதானமாக ஆட நினைத்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே இந்திய அணியினர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.

வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய 2வது ஓவரின் முதல் பந்தில் எல்பிடபிள்யு முறையில் துவக்க ஆட்டக்காரர் ஜென்னிங்ஸ் ரன் ஏதுமின்றி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட்டும் தாக்குபிடிக்கமுடியாமல் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் 4 ரன்களில் வெளியேறினார். சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கட் வீழ்ந்த வண்ணம் இருந்தது. பிறகு மொயீன் அலி சாம் குர்ரானுடன் இணைந்தார்.

இருவரும் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அணியின் ஸ்கோர் 167 ஆக இருக்கும் போது மொயீன் அலி 40 ரன்களில் அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். சாம் குர்ரான் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்து இறுதியாக ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக சாம் குர்ரான் 78 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, முகமது சமி, அஸ்வின் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். அதை தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் விக்கட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 11 ரன்னுடன் தவான் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news