September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

இங்கிலாந்து அணிக்கு பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்த இந்திய அணி விவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்டில் தோல்வி கண்ட இந்திய அணி தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் நாளில் இந்திய அணி 6 விக்கட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி சிறிது நேரத்தில் எஞ்சிய விக்கட்டுகளையும் இழந்து 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிக பட்சமாக ரகானே 81 ரன்களும் விராட் கோலி 97 ரன்களும் அடுத்து ஆட்டமிழந்தனர். முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்களில் ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது.

வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. கோலியும், புஜாராவும் அவசரம் காட்டாமல் பொறுமையாக ஆடினர். அணியின் ஸ்கோர் 224 ரன்களாக உயர்ந்த போது, புஜாரா (72 ரன், 208 பந்து, 9 பவுண்டரி) பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற குக்கிடம் கேட்ச் ஆனார். அடுத்து துணை கேப்டன் ரஹானே வந்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய விராட் கோலி பவுண்டரி அடித்து தனது 23-வது சதத்தை நிறைவு செய்தார்.

ஆனால் சிறிது நேரத்தில் விராட் கோலி 103 ரன், கிறிஸ் வோக்சின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 1 ரன் தாக்குப்பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக மட்டையை சுழட்டி அரைசதம் கண்டார். இதற்கிடையே ரஹானே 29 ரன்களிலும் முகமது ஷமி 3 ரன்னிலும் வெளியேறினர். இந்திய அணி 2-வது இன்னிங்சில் 110 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பாண்ட்யா 52 ரன்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news