Inandoutcinema - Tamil cinema news

2 விக்கட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கும் இந்திய அணி -விவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால், போட்டி நடைபெறும் மைதானத்தில் கனமழை பெய்தது. இதனால், டாஸ் கூட போடப்படாமல் முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.

இன்று போட்டி தொடங்கியது இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பந்து வீச்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே ஆக்ரோஷமாக விளையாட ஆரம்பித்தது. அன்டேர்சன் வீசிய முதல் ஓவரின் 5வது பதில் முரளி விஜய் ஆட்டமிழந்தார்.

முதல் மூன்று ஓவரில் ரன் கணக்கை தொடங்காத இந்திய அணி 4 ஓவரில் ராகுல் அடித்த பௌண்டரியுடன் ரன்கணக்கை தொடங்கியது. பின்னர் தடுமாறிய இந்திய அணி ராகுல் விக்கட்டை இழந்தது. 6.3 ஓவர்களில் இந்திய அணி 11 ரன்களுக்கு 2 விக்கட் இழந்து தடுமாறிக்கொண்டிருக்கையில் மழை குறிக்கிட்டது. அதனால ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புஜாரா 19 பந்தில் 1 ரன்னுடனும், கோலி 2 பந்தில் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news