Inandoutcinema - Tamil cinema news

ஹர்திக் பாண்டியா உதவியுடன் 450 ரன்களை கடந்த இந்திய அணி. விவரம் உள்ளே

12 வது அணியாக டெஸ்ட் அந்தஸ்த்து பெற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டிய ஷிகர் தவான் சதமடித்து அசத்தியுள்ளார். இதில் 19 பௌண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். டெஸ்ட் போட்டியில் உணவு இடைவெளிக்கு முன்னதாக சதமடித்தவர் பட்டியலில் முதல் இந்தியராகவும், உலக அளவில் தவான் 6வது நபராக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சதமடித்த சிறிது நேரத்தில் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். ஒரு புறம் விக்கட் வீழ்ந்தாலும் நிதானமாக ஆடிய விஜய் சதமடித்தார். இந்திய அணி முதல் ஆட்டநேர முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்திருந்தது. இன்னிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும், அஷ்வின் 18 ரன்களில் வெளியேறினார்.

ஜடேஜா 20 ரன்களில் நடையை கட்டினார். மறுபுறம் பாண்ட்யா அதிரடி ஆட்டம் ஆடினார். அபாரமாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா 71 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி 104.5 ஓவர்களில் 474 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 1 விக்கட் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்து ஆடுகிறது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news