நடிகையும் மாடல் நடிகையுமான சோபியா ஹயாதை இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ரோகித் சர்மா காதலித்து காயபடித்தினார் என்று நியூஸ் வைரலாகி வருகிறது. அதை பற்றி ஒரு அலசல்!..

லண்டனில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சோபியா ஹயாத் பின்வருமாறு கூறினார், தனது வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று எழுதி வருகிறேன். என் வாழ்க்கையில் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை என்னால் மறக்கமுடியாது.
ஏனென்றால் ரோகித் சர்மாவை லண்டனில் உள்ள கிளப் ஒன்றில் முதல் முறையாக சந்தித்தேன். என் நண்பர் ஒருவர் ரோகித்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் கிளப்பில் ரோகித்தும் நானும் தனிமையில் பேசி கொண்டிருந்தோம். அப்போது ரோகித் திடிரென்று எனக்கு முத்தம் கொடுத்தார். எனக்கும் பிடித்திருந்தது, பிறகு இருவரும் டான்ஸ் ஆடினோம். அவர் உண்மையில் நல்லவர் மிகவும் கனிவானவர்.

நாங்கள் ஒன்றாக இருந்ததை பார்த்த மீடியாக்கள் நாங்கள் காதலிக்கிறோம் என்று பரப்பியது. உண்மையில் நான்தான் அவரை காதலித்தேன், நான் வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை. ரோஹித்திடம் தெரிவிக்கும் போது நான் அவரது ரசிகை மட்டுமே என்று கூறிவிட்டார்.

இதை கேட்டு மனஉளைச்சல் ஆனது, அதனால் நான் அவரை விட்டு தூரம் சென்றுவிட்டேன். அவரிடமிருந்து பிரிந்த பிறகு ட்விட்டரில் ரோஹித்தை பிளாக் செய்துவிட்டேன்.இவ்வாறு பேட்டியில் சோபியா ஹயாத் ரோஹித்தை பற்றி சொன்னது வைரலாகி கொண்டிருக்கிறது. இது உண்மையா பொய்யா என்பது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்!
